Trisha income tax case hearing postponed to next week by chennai high court
நடிகை திரிஷா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கின் மேல் முறையீடு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 -2011 ஆண்டில் நடிகை த்ரிஷா வருமானத்தை மறைத்தாதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ரூ. 1.11 கோடி அபராதம் விதிக்கப்படிருந்தது.

இதையடுத்து இந்த அபராதத்தை எதிர்த்து த்ரிஷா தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் த்ரிஷாவுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
.jpg)
இந்நிலையில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
