trisha get selfi for big boss contestant
நடிகை திரிஷா தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படங்கள் எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் பள்ளி மாணவியாக நடிக்க மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். சமீபத்தில் இவருடைய அந்தப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில், பாதியில் உள்ளே வந்தாலும் பல ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார் திரிஷா.

இந்தப் புகைப்படத்தை ஹரீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
