அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினியின் மனைவியாக சிறுவேடத்தில் நடித்திருந்தார். 

இந்தப் படத்தை தொடர்ந்து, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2, பரமபதம், ராங்கி என திரிஷாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 
இதில் பெரும்பாலான படங்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகும். அந்த வகையில், தற்போது எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்து வரும் படம் ராங்கி. 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில் உருவாகும் இந்தப் படத்தில், சோலா ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். ஏற்கெனவே முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அங்கு ஸ்டண்ட் காட்சி உட்பட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்துவருவதால், உஸ்பெகிஸ்தானிலேயே படக்குழுவுடன் தீபாவளி பண்டிகையை திரிஷா கொண்டாடியுள்ளார். 

அதேநேரம், தீபாவளி ஸ்பெஷலாக ராங்கி படத்தின் 3-வது லுக் போஸ்டரை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஸ்டைலிசான லுக்கில் திரிஷா இருக்கும் இந்த போஸ்டர், சோசியல் மீடியாவில் ரசிகர்களின் லைக்குகளை அள்ளிவருகிறது.