தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 19  வருடங்களாக அசைக்க முடியாத முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. வயது அதிகரிக்க அதிகரிக்க இவரின் அழகும் கூடி கொண்டே போகிறது என கூறிவருகிறார்கள் இவருடைய ரசிகர்கள் .

அதற்கு ஏற்ற போல்... கடைசியாக இவர் நடிப்பில் வெளியான '96 ' மற்றும் 'பேட்ட' படங்களில் அழகு தேவதை போல் மின்னினார் த்ரிஷா.

இந்நிலையில் நாளை (மே 4 )ஆம் தேதி, அவர் தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'பரமபத விளையாட்டு' படத்தின் ட்ரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் .

முன்னணி கதாநாயகர்களின் பிறந்த நாளில் மட்டுமே, அவர்கள் நடித்த படங்களின், டீசர், ட்ரைலர் வெளியாகி வந்த நிலையில்... தற்போது இந்த லிஸ்டின் புதிதாக இணைந்துள்ளார் த்ரிஷா. இந்த விஷயம் த்ரிஷாவின் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.