மல்டி ஸ்டார் படமாக உருவாகும் கமல்ஹாசனின் 234! மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் கூட்டணி!

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள 'KH234' திரைப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளது, அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட் மூலம், தெரியவந்துள்ளது.
 

trisha and jayamravi join KH234 movie officially announced mma

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும்  மணிரத்னம் கூட்டணியில், கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் கமல்ஹாசனுக்கு பெற்று தந்தது.  இந்த படத்தை தொடர்ந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் கமல்ஹாசன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்காலிகமாக இப்படத்திற்கு KH234 என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இன்று காலை முதலே, இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் பற்றிய அப்டேட் ஒன்றின்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமல்ஹாசனின் 234-ஆவது படத்தில் இணைந்துள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகார பூர்வமாக அறிவித்தது. 

 

இதை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர், இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷா மற்றும் ராஜ ராஜ சோழனாக நடித்திருந்த ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இப்படத்தில், மீண்டும் பொன்னியின் செல்வன் நடிகர்களும் இணைந்துள்ளதால், படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios