நடிகை திரிஷா ஜெயம் ரவிக்கு அக்கா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவது, கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம், தற்போது இயக்கி வரும் கனவு திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

பல்வேறு இடங்களில்... இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் நிலையில், குந்தவையாக நடித்து வரும் திரிஷாவிற்கு, ஜெயம் ரவி தம்பியாக நடித்து வருகிறாராம்.

எனினும், குந்தவை தான் 'பொன்னியின் செல்வன்' கதையின் நாயகி என திரிஷாவின் ரசிகர்கள் மனதை தேற்றிகொண்டாலும், ராஜராஜ சோழனாக நடித்து வரும் ஜெயம் ரவி அவருடைய தம்பி என்பது தான் சற்று வருத்தம். 

சம்திங் சம்திங் , பூலோகம் போன்ற படத்தில் ஜெயம் ரவியை சுற்றி சுற்றி காதலித்த நடிகை திரிஷா, ஜெயம் ரவிக்கு அக்காவாக? என கோலிவுட் திரையுலகில் தற்போது வரை நம்ப முடியாமல் உள்ளது.