கொரோனா நிதி:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல், பல கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் சில நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றும், பசி பட்டினியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

இப்படி மிகவும் நலிவுற்றவர்களுக்கு, நல்ல மனம் படைத்த பலர் தானாக முன் வந்து உதவிகளை செய்து வருகிறார்கள். 


 
திருநங்கைகள்:

சாதாரண மக்களின் நிலையே இப்படி நிலைகுலைந்துள்ள நிலையில், மக்கள் யாரவது கொடுக்கும் பணத்தை நம்பி வாழ்ந்து வந்த திருநங்கைகள் நிலை அதை விட மிகவம் மோசமாகியுள்ளது.


நிவாரண நிதி:

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், சினிமா படப்பிடிப்புகள் முழுவதும் முடக்கப்பட்டதால் வேலை இல்லாமல் கஷ்டப்படும், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ள நிலையில், தங்களுக்கும் நிதி உதவி செய்ய வேண்டும் என சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் முன், 8 திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர்.


லதா ரஜினிகாந்த் உதவி:

புளியந்தோப்பைச் சோ்ந்த இந்த 8 திருநங்கைகளும், நடிகா் ரஜினிகாந்த் வீட்டின் முன் அமர்ந்து தலைவர் தங்களுக்கும் நிதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் இறங்கியதை அறிந்த, சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த், அவரச அவரசமாக தன்னுடைய காவலாளி மூலம் ரூபாய் 5000 பணத்தை கொடுத்து இந்த பிரச்னையை ஆப் செய்துள்ளார்.

பரபரப்பு:


சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரங்கேறி ஓரிரு   நாட்கள் ஆகும் நிலையில் தற்போது தான் இந்த பிரச்சனை பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.