விரைவில் ஆரம்பமாக உள்ள, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியாகும் தகவல்கள் தான் தற்போது, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரபட்டும்  , படிக்கப்பட்டும் வருகிறது. 

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், டிக்டாக் ஆப் மூலம்  இனிமையான குரலால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட திருநங்கை சாக்ஷி கலந்து கொண்டு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, திறமையை நிரூபிக்க  இவர் பாட துவங்கியதும் ரசிகர்கள் சிலர் ஆதரவு கொடுத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  குறிப்பாக மற்றொருவர் பாடும் பாடலுக்கு சாக்ஷி வாய் அசைக்கிறார் என்று கூட விமர்சங்கள் எழுந்தது.

இந்நிலையில் இவரும், இவருடன் இணைந்து பாடி வரும் ஸ்டான்லி என்பவரும் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருநங்கை மற்றும் அவருடைய ஆண் தோழர் ஒருவரும் இணைந்து கலந்து கொள்ள உள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான சில முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இம்முறை திருநங்கை போட்டியாளர் ஒருவரை களம்  இறங்கியுள்ளது பிக்பாஸ். 

இது போல் பல தகவல்கள் வெளிவந்தாலும், இப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்ள, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் வரை காத்திருப்போம்.