Sherin Celin Death: காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரளாவை சேர்ந்த திருநங்கையான நடிகை, அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாடல் , நடிகை என இரட்டை குதிரையில் வலம் வந்தவர் திருநங்கை ஷெரின் செலின். ஆலப்புழா பகுதியை சேர்ந்த இவர் கொச்சியின் சக்கரபரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

தூக்கு போட்டு தற்கொலை:

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷெரின் செலின் சில நாட்களாக தீராத மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷெரின் செலின் நேற்று அவரது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வு முடிவுக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளாவில் அடுத்தடுத்து தொடரும் மர்மங்கள்:

மேலும், மலையாள மாடலும் நடிகையுமான சஹானா என்பவர் கடந்த மே 12, வியாழக்கிழமை இரவு வீட்டு சன்னல் கம்பியில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்தனர். அவரது மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவரது கணவர் சஜ்ஜத்தை விசாரித்து வருகின்றனர். 

 மேலும் படிக்க ....Viruman: விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கார்த்தியின் விருமன் படம் ...சூப்பர் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்..

இதுகுறித்து, சஹானாவின் தாயார் என்னுடைய மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, கேரளாவில் நடைபெற்ற அடுத்தடுத்த மர்மங்கள் போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

View post on Instagram