டி.ராஜேந்தரின் இளைய மகனும்,  நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது இசையமைப்பாளராக இருக்கிறார். சிம்பு நடித்து திரைக்கு வந்த 'இது நம்ம ஆளு'  படத்தில் குறளரசன் இசை அமைத்தார்.

மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் இவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நிலையில் குறளரசன் தனது தந்தையும் இயக்குனருமான, டி ராஜேந்தர் , தாய் உஷா,  ஆகியோருடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்றார்.

அங்கு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாக தகவல் வெளியானது.  இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த வீடியோ திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆனால் தர்காவுக்கு ஒரு வேண்டுதலுக்காக சென்றிருந்ததாக குறளரசன் தெரிவித்தார். 

இந்த நிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதை டி.ராஜேந்தர் நேற்று உறுதிப்படுத்தினார். அவர் இது குறித்து  கூறும்போது எனது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது உண்மைதான்.  எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் எனது மகன் முடிவுக்கு மதிப்பளித்து என்று கூறியுள்ளார். இதன் மூலம் குறளரசன் வேண்டுதலுக்காக போனேன் என்று சொன்னது உண்மை இல்லை என தெரிகிறது.