TR promises to producer Kalaippuli S Dhanu

‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிம்பு நடிப்பில் திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனரின் இயக்கத்தில் வெளியான கில்மா டைப் படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், பயங்கர பிளாப். சிம்புவின் சினிமா கெரியரே காலியாகிவிடும் என்ற அளவுக்கு வலைதளங்களில் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.

ஆனால், அவரின் அடுத்த படம் குறித்த ஏகப்பட்ட தகவல்களும் வந்துகொண்டுதான் இருந்தன. இதனால் கடுப்பான சிம்பு, ‘என்னைப்பற்றி எழுதுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்’ என்று ட்விட்டரில் கொதித்தெழுந்தார். இதன் பிறகு தான் இயக்கம் மல்டி ஸ்டார் மூவியில் நடிக்க மணிரத்னம் அழைத்தார்.

அதன்பிறகு கலைப்புலி எஸ்.தாணு சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். சக்ஸஸ் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு டி.ராஜேந்தர் கேட்டுக் கொண்டதற்காக இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல், ‘நேரத்திற்கு மகனை ஷூட்டிங் வரச்சொல்றேன்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். கலைப்புலி தாணு ஏற்கனவே சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’ படத்தைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.