tr act against vishal due to this specific reason
ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கலை கடைசி தினமான நேற்று சமர்பித்தார்.
ஆனால்,அதில் முன்மொழிந்தவர்களின் பெயர்களில் இரண்டு நபர்களின் பெயர்கள் போலி கையெழுத்தாக உள்ளது என காரணம் காட்டி அவருடைய மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்
இதற்கு முன்னதாக விஷாலுக்கு எதிராக,அவர் பதவி விலக வேண்டும் என கூறி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இயக்குநர் சேரன் மற்றும் மற்ற தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
இந்நிலையில் சேரனுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர் டி.ராஜேந்தர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்? என்றும்,கடந்த எட்டு மாத காலத்தில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியும் அவர் செய்ய வில்லை என அடுக்கடுக்காக வசன மொழியில் தன் எதிர்ப்பை தெரிவித்தார்
மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்துகொண்டு,அரசுக்கு எதிராக தேர்தலில் நிற்பதால் அரசு சார்பில் எந்த உதவியையும் தயாரிப்பாளர் பெற முடியாது என குற்றம் சாட்டினார்
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,டி.ராஜேந்தரின் மகன் சிம்பு நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுடன் போட்டியிட்டு தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையெல்லாம் மனதில் வைத்து தான் திடீரென களத்தில் குதித்து உள்ளார் டிஆர் என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்
