BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டித்தூக்கப்போவது இவரா? - லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்
BiggBoss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது ஜூலி, பாலா, நிரூப், தாமரை செல்வி, சுருதி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
தமிழில் முதன்முறையாக ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் விலகியதால் அவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்படும், ஆனால், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால் போட்டியும் கடுமையாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது ஜூலி, பாலா, நிரூப், தாமரை செல்வி, சுருதி, ரம்யா பாண்டியன், அபிராமி ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூட இரண்டு போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று பாலா மற்றொன்று ஜூலி. இவர்கள் இருவருக்கு தான் ரசிகர்களிடையே அதிகம் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இவர்கள் இருவரின் இருந்து ஒருவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Samantha : காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஓவர்! சமந்தாவுக்கு காஸ்ட்லி Gift கொடுத்து வழியனுப்பி வைத்த நயன்