Samantha : காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஓவர்! சமந்தாவுக்கு காஸ்ட்லி Gift கொடுத்து வழியனுப்பி வைத்த நயன்
samantha : விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்த நடிகை சமந்தாவுக்கு, நடிகை நயன்தாரா காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல்
போடா போடி, நானும் ரவுடி தான், தானே சேர்ந்த் கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறூவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையமைக்கும் 25-வது படம் இதுவாகும். இதுவரை இப்படத்தில் இருந்து ‘ரெண்டு காதல்’, ‘டூ டுட்டூ’, ‘நான் பிழை’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த 3 பாடல்களும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் எஞ்சியுள்ள பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்
குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ‘டூ டுட்டூ’ பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டானது. அப்பாடலின் ஷூட்டிங் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், சமீபத்தில் அதையும் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இப்பாடலுக்கு விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடனமாடி உள்ளனர். இத்துடன் இப்படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்கை முடித்த நடிகை சமந்தாவுக்கு, நடிகை நயன்தாரா காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி விலையுயர்ந்த காதணி ஒன்றை சமந்தாவுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தி உள்ளார் நயன்தாரா. அந்த பரிசை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சமந்தா, தேங்க்யூ டார்லிங் நயன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... vaadivaasal : ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே வாடிவாசலுக்கு செம டிமாண்ட்... ஜிவி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்