vaadivaasal : ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே வாடிவாசலுக்கு செம டிமாண்ட்... ஜிவி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்
vaadivaasal : வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு, ஜல்லிக்கட்டு காட்சிகள் சில படமாக்கப்பட்டன.
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள படம் வாடிவாசல். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து தயாராக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்ட செட் போட்டு, ஜல்லிக்கட்டு காட்சிகள் சில படமாக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட சூர்யா, காளையை அடக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
இந்நிலையில், வாடிவாசல் படத்தின் மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி வாடிவாசல் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி கடும் போட்டி நிலவி வருவதாகவும், இதுவரை இல்லாத அளவு அதிக தொகைக்கு இப்படத்தின் ஆடியோ உரிமைகளை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, இப்படத்தில் நடித்து முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Aditi Shankar :ஏற்பாடுகள் தீவிரம்.. ஷங்கரின் 2-வது மகள் அதிதிக்கு திருமணமா? தீயாய் பரவும் தகவல்- பின்னணி என்ன?