topsee pannu relation ship with jeet 2 producer

நடிகை டாப்ஸிக்கு 'காஞ்சனா ௨' படத்தை தொடர்ந்து, தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.

இவர் தற்போது இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் படமான 'ஜீட்வா 2 ' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். 

ஏற்கனவே 'ஜீட்வா' முதல் பாகம் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து பாலிவுட்டில் மிக பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வரும் இவருக்கும், இன்னொரு கதாநாயகியான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கும் ஈகோ பிரச்சனை இருந்து வருகைதாக தெரிகிறது. இதனால் படத்தின் ஷூட்டிங்கில் கூட ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வது இல்லையாம்.

இதனால் இந்த நடிகை தன்னுடைய நண்பர்கள் மற்றும் படக்குழுவில் நெருக்கமானவர்களிடம் நடிகை டாப்சியை 'ஜீட்வா 2 ' படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவிற்கும் தொடர்பு இருப்பதாக கொளுத்தி போட்டு வருகிறாராம். 

மேலும் இதன் காரணமாக தான் தன்னை விடிய டாப்ஸீக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் புலம்பி வருகிறாராம்.