topsee open talk about first love

'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்ற படமாக அமைந்ததால், இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் இவர் நடித்த படங்கள், தொடர்ந்து தோல்வியடைந்ததால் இவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தது, அதனால் தற்போது தெலுங்கு, மற்றும் இந்தி போன்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.

தற்போது சமீபத்தில் டாப்ஸி ஒரு பாலிவுட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அதில் அவரிடம் செய்தியாளர்கள், உங்களுடைய முதல் காதல் குறித்து கூறுங்கள் என கேட்டுள்ளனர்.

அப்போது பேசிய டாப்ஸி, தனக்கு 6 வயதிலேயே காதல் வந்துவிட்டதாகவும், என் முதல் காதல் நடனம் மீது தான் என கூறியுள்ளார்.

மேலும் 6 வயதில் நடனத்தின் மீது ஏற்பட்ட காதல், தற்போது வரை தீராமல் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.