topsee dress issue

நடிகை டாப்ஸி தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மிகவும் கவர்ச்சியான ஆடையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். 

அதை பார்த்த ஒருவர், டாப்ஸியை கிண்டல் செய்யும் விதமாக "இப்படி உடை அணிவதால் தான் ஆண்களுக்கு பெண்களிடம் தவறாக நடக்கவேண்டும் என தோன்றுகிறது என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் டாப்ஸி "அப்படி என்றால் முதலில் அவர்கள் கொடூர புத்தியை தான் மாற்றவேண்டும், ஆடையை அல்ல" என கூறியுள்ளார்.

மேலும் காசுக்காக ஆடையை குறைத்து நடிப்பது பற்றி கேள்வி கேட்ட ஒருவருக்கு பதிலளித்த டாப்ஸி "உங்களை போன்ற கலாச்சார காவலர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்" என விமர்சிக்கும் விதத்தில் பதில் அளித்துள்ளார். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…