tomorrow VIP-2 movie teaser release - Dhanush

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவான படம் “வேலையில்லா பட்டதாரி” தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, சரண்யா உள்பட பலர் நடித்த அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

முதல் பாகமே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் முந்தைய படத்தில் நடித்த நடிகர் - நடிகைகளே வைத்தே எடுக்கலாம் என்று முடிவு எடுத்து வேலையை ஆரம்பித்தனர்.

இரண்டாம் பாகத்தில் கூடுதலாக, இந்தி நடிகை காஜோல் அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

செளந்தர்யா ரஜினி விஐபி-2 படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஜூலை 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

முன்னதாக, விஐபி-2 படத்தின் டீசர் நாளை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.