Tomorrow starts with the dubbing of discreet film ...

அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டப்பிங் நாளை முதல் தொடங்குகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘விவேகம்‘.

இப்படத்தின் டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று இப்போ வரைக்கு கலக்கிக் கொண்டு இருக்கிறது. இது 14 மில்லியன் பார்வையையும், 4 இலட்சம் லைக்குகளையும் நோக்கி செல்கிறது.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பல்கேரியா நாட்டில் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ‘விவேகம்‘ படத்திற்கான டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளன.

இதனிடையே இப்படத்தை வாங்குவதற்கு வினியோகஸ்தர்களிடம் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.