Tom Alter who took interview Sachin Tendulkar on TV died today ...

முந்நூறு படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகரும், எழுத்தாளருமான டாம் ஆல்டர் இன்று காலமானார்.

கடந்த 1950-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் முசூரியில் பிறந்தவர் டாம் ஆல்டர்.

அமெரிக்க பாரம்பரியத்தைக் கொண்ட டாம், புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.

இவர் 300-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் விளையாட்டு விமர்சகராகவும் இருந்துள்ளார்.

மேலும், மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முதல் முதலில் டிவியில் பேட்டிக் கண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் இவர் தான்.

இவரது கலைத் தொண்டினை பாராட்டி, 2008-ஆம் ஆண்டு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

இவருடைய மனைவி கரோல், மகன் ஜேமி ஆல்டர், மகள் அஃப்ஷான்.

கடந்த சில மாதங்களாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.