‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ராதிகா ஆப்தே அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கவர்ச்சி கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனக்கு அதுபோன்று நடிப்பதில் உடன்பாடு இல்லை. திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறேன்.

நான் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் அனைத்து படங்களிலுமே எனக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. படப்பிடிப்புகளில் தினமும் புதிய விஷயங்களை கற்கிறேன் இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

மறக்காமல் இதை செய்யும் தமன்னா!

யோகா பயிற்சி மனதை மட்டுமல்ல, உடலை கட்டுக் கோப்பாக வைக்கிறது. எனவே பெரும்பாலான நடிகர், நடிகைகள் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். அனுஷ்கா யோகா ஆசிரியையாக இருந்து நடிகையானவர். இவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு செல்லும்போது, யோகா பயிற்சி பற்றிய ஆலோசனைகளை நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருகிறார். இவரை தொடர்ந்து பல நடிகைககள் யோகா பயிற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பள்ளியில், யோகா மாஸ்டர் ருஹீ என்பவரிடம் தீவிர யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

கடுப்பில் வெளியேறிய காஜல்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். பிரபல நாயகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார். காஜல் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றிபெற்று வருகின்றன. இதனால் புதிய படங்களில் நடிக்கும் போது, சம்பளத்தை உயர்த்தி வருகிறார். சமீபத்தில், தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் ‘அமர் அக்பர்’ படத்தில் அவருடைய ஜோடியாக ஒப்பந்தம் ஆனார். அப்போது கூடுதல் சம்பளம் பேசி இருந்தார். முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட காஜல், பின்னர் தான் பேசியபடி கூடுதல் சம்பளம் கொடுக்காததால், அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். 

ரவிதேஜா படத்தில் இருந்து காஜல் விலகியது குறித்து தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது பற்றி கூறிய காஜல் அகர்வால், “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சம்பளத்தை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் இது போன்ற மசாலா படங்களுக்கு சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என சொல்கிறாராம்.

தள்ளிப் போன தல படம்!

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விஸ்வாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விஸ்வாசம்’ படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

அஜித்தின் விவேகம் முடிந்து ஒரு வருடங்கள் மேல் ஆகிறது இவரின் அடுத்த படம் விஸ்வாசம் என்று சொல்லி படபிடிப்பு இப்போ அப்போ என்று தள்ளிபோகொண்டே இருக்கிறது தற்போது மீண்டும் படபிடிப்பு தள்ளிபோகிறது காரணம் தற்போது நடக்கும் சினிமா வேலை நிறுத்தம் தானாம் ஓகே இவ்வளவு நாட்களாக ஏன் படபிடிப்பு இன்னும் ஆரம்பம் ஆகவில்லை என்றால் படக்குழுவின் சார்பாக இதுவரை எந்த வித பதிலும் இல்லை சரி எப்போதுதான் தொடங்கும் எனப் பார்ப்போம்