பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் ஒருவர் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு, மக்களின் ஆதரவு மிகவும் குறைவாக உள்ளவர் எலிமினேட் செய்யப்படுகிறார். முதல் வாரத்தில் இருந்து இதுவரை ஐந்து பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். 

இந்த வார எலிமினேஷன் நாமினேஷனில் நமீதா, ஓவியா, கணேஷ் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களில் ஓவியா எலிமினேட் ஆகப்போவதில்லை என்று நேற்றைய நிகழ்ச்சியிலேயே கமல் அறிவித்துவிட்டார்.

இதனால் தற்போது அந்த லிஸ்டில் உள்ள நமீதா மற்றும் கணேஷ் ஆகிய  இருவரில் யார் வெளியேறுவார்கள் என்பதை இன்று தான் ஒளிபரப்புவார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே நமீதா வெளியேறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகிறது.