அதன் பின்னர் காஞ்சனா 3 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியலாவிற்கு ஐரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

இல்லத்தரசிகள் முதல் வயதான பாட்டி வரை பலரது நடிப்பு திறமையையும் வெளியே கொண்டு வந்தது டிக்-டாக் செயலி. இதன் மூலம் பிரபலமான ஆயிரக்கணக்கானோரில் கேப்ரியலாவும் ஒருவர். கடிதம் மூலம் மெசேஜ் சொல்லும் இவருடைய டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியவில் மிகவும் பிரபலம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன் பின்னர் காஞ்சனா 3 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியலாவிற்கு ஐரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் சின்ன வயது நயன்தாராவாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கேப்ரியலா. 

கனவுகளுடன் போராடும் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சுந்தரி என்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியல் தொடர்பான விளம்பரத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேப்ரியலா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ.... 

View post on Instagram