இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், வித்தியாசமான கருத்துகளையும் பெற்று  வசூல் ரீதியில் வெற்றியடைந்து.

இந்த படம் இதுவரை தமிழில் வெளிவந்த, முன்னணி நடிகர்கள் படங்களை விமர்சிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காமல் கலாய்திருந்தார் இயக்குனர்.

இந்த படத்தில், தமிழ்ப்படம் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த மிர்ச்சி சிவா நாயகனாகவும்,  திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர். 

சுமார் 6 கோடி செலவில், தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாகி 10 கோடிக்கும் மேல் கல்லா கட்டியது. மேலும் தற்போதும் சில திரையரங்கங்களில் இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் தமிழ்ப்படம் முதல் பாகத்தை தயாரித்த துரைதயாநிதி, தன்னுடைய அனுமதி இல்லாமல் தமிழ்ப்படம் என்ற தலைப்பை பயன்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுத்திருப்பதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுவரை தமிழ்ப்படம்-2 வசூலித்த தொகையை முடக்கும்படியும் கூறியள்ளார்.