Chilla Chilla Release date: தீ தளபதியை தட்டி தூக்குமா அஜித்தின் சில்லா சில்லா..? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா...  பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

thunivu movie chilla chilla song release date announced

அஜித்தை வைத்து இதுவரை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களை இயக்கியுள்ள எச்.வினோத், மூன்றாவது முறையாக மீண்டும் அஜித்தை வைத்து 'துணிவு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை பிரபல பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள அஜித்தின் 'துணிவு' படத்தில், மலையாள லேடி சூப்பர்  மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பாவனி, அமீர், சமுத்திரக்கனி, சிபி சக்கரவர்த்தி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் இந்த பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

விடுதலை படப்பிடிப்பில் பறிபோன உயிர்.! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

thunivu movie chilla chilla song release date announced

இதுகுறித்து சற்று முன் வெளியாகியுள்ள தகவலின் படி, இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையில் உருவாகியுள்ள சில்லா சில்லா பாடல், டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அஜித்தின் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

'வாலி' படப்பிடிப்பின் போது தற்கொலை செய்துகொள்வேன் என கூறி அதிர வைத்த SJ சூர்யா? ஏன் வெளியான அதிர்ச்சி தகவல்!

thunivu movie chilla chilla song release date announced

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் முழுக்க முழுக்க வங்கி கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து கூறிய இயக்குனர் எச்.வினோத், துணிவு படத்தை மிகவும் சிறிய பட்ஜெட் படமாக எடுக்கவே திட்டமிட்டதாகவும், அஜித்திடம் எதார்த்தமாக கதை கூறிய போது, இந்த கதை அவருக்கு பிடித்துப் போனதால்... இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் இந்த படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகி இது பெரிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பணத்தைப் பற்றிய படமாக இருக்கும் எனவும் என தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும், அஜித்தின் துணிவுடன் மோத உள்ள நிலையில்... நேற்று வெளியான தீ தளபதி பாடலை சில்லா சில்லா தட்டி தூக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios