விடுதலை படப்பிடிப்பில் பறிபோன உயிர்.! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'விடுதலை' படத்தில் ஏற்பட்ட, விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடித்து வரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், தற்போது வரை ஒரு சில காரணங்களால் படத்தின் படப்பிடித்து இன்னும் முடிவடையாமல் நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கெளதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடந்த இந்த படப்பிடிப்பின் போது, சண்டை காட்சி படமாக்க பட்டபோது, ரோப் கயிறு அறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்... ஸ்டன்ட் கலைஞர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோர்ட்மென்ட் நிறுவனம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஸ்டாண்ட் கலைஞர் சுரேஷ் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், படப்பிடிப்பு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மறைந்த ஸ்டண்ட் கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர் இந்து அறிக்கை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- actor soori viduthalai
- rs infotainment statement
- vetrimaaran viduthalai movie
- vetrimaran viduthalai
- vidudhalai shooting spot accident
- viduthalai
- viduthalai accident
- viduthalai movie
- viduthalai movie online
- viduthalai movie poster
- viduthalai movie shooting spot
- viduthalai shooting
- viduthalai shooting accident
- viduthalai shooting spot death
- viduthalai soori movie
- viduthalai tamil movie songs
- viduthalai trailer
- vijay sethupathi viduthalai
- stunt man death