நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள, 'கேங்ஸ்டா' பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தில் இருந்து டிசம்பர் 25ஆம் தேதி, 'கேங்ஸ்டர்' லிரிக்கல் பாடல் வெளியாக உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது கோலிவுட் திரை உலகில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்கள் என்றால், அது 'துணிவு' மற்றும் 'வாரிசு' படத்தின் ரிலீஸ் குறித்து தான். சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர், அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் அதுவும் பண்டிகை நாட்களில் மோத உள்ளதால், இரு படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அஜித் விஜய்யின் படங்கள், தனித்தனியாக வெளியானாலே... அவருடைய ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு சமூக வலைதளத்தில் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், தற்போது இருவருடைய படமும், நேருக்கு நேர் மோத உள்ளதால், சமூக வலைதளமே மிகவும் பரபரப்பாக மாறி உள்ளது.
ஏற்கனவே விஜயின் வாரிசு படத்தில் இருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிசம்பர் 24 ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதேபோல், அஜித்தின் 'துணிவு' படத்தில் இருந்து, இதுவரை இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், விரைவில் மூன்றாவது பாடலான 'கேங்ஸ்டா' பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில், தற்போது பாடல் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். அந்த வகையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள, 'கேங்ஸ்டா' பாடல், வெளியாக உள்ளதாக 'சீண்டுனா சிரிப்பவன் சுயவழி நடப்பவன்' லிரிக்கல்' வரிகளுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் எத்தனை மணிக்கு இப்பாடல் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Varisu Story: 'வாரிசு' படத்தின் கதை இதுவா? வளர்ப்பு பிள்ளையாக மாறிய தளபதி விஜய்..!
