அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தில் இருந்து மிக முக்கிய தகவல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து, அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ள இந்தப் படம், ஜனவரி மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்திற்காக, அஜித்தின் ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்கும் நிலையில், நாளை இந்த படத்தில் இருந்து முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி விஜயின் 'வாரிசு' படமும் பொங்கல் பண்டிகையை குறிவைத்துள்ளதால், தீவிர புரோமோஷன் பணிகளிலும் 'துணிவு' படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், அண்மையில் கூட அஜித்தின் துணிவு திரைப்படம், துபாயில் ஸ்கை டைவிங் மூலம் பிரமோட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் ரசிகர்கள் அடுத்து 'துணிவு' படம் குறித்து என்ன தகவலை வெளியாகும் என காத்திருந்த, நிலையில் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த பொங்கலை சும்மா செய்றோம்.. அஜித் - விஜய்க்கு ஒரே பேனர் வைத்து.. 'வாரிசு'-க்கு வாழ்த்து சொன்ன தல ரசிகர்கள்!

இதுவரை துணிவு படத்தில் இருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், நாளை மிக பெரிய தகவல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ஒருவேளை 'துணிவு' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சிபி சக்கரவர்த்தி. பாவனி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள இந்த தகவல் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

'தசாவதாரம்' கமல்ஹாசனை மிஞ்சிய சூர்யா..! 42-வது படத்தில் 13 கெட்டப்பில் நடிக்கிறாரா?

Scroll to load tweet…