three day collection of oscar recommended film
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் ‘நியூட்டன்’.
இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது.
ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 430 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நக்சல் பாதித்த பகுதிகளில் அரசு அதிகாரியான ராஜ்குமார் தேர்தலை எப்படி வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. அதனை அரசியல், கேலி என்று நன்றாக படமாக்கியுள்ளனர்.
“நியூட்டன்” வெளியான மூன்று நாட்களில் மட்டும் ரூ.6.90 கோடி வசூலித்திருக்கிறது.
இந்தப் படத்துடன் வெளியான சஞ்சய் தத்தின் ‘பூமி’, ஸ்ரத்தாவின் ‘ஹசீனா’ படங்களை விட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் ‘நியூட்டன்’ படம் வசூலில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பும் கூடியுள்ளது.
