OREO: குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஓரியோ பிஸ்கேட் க்ரீமில் மெழுகு போன்ற பொருள் இருந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் அமோக விற்பனை ஆகி வரும் சேன்விஜ் குக்கியில் முதல் இடம் பிடித்திருப்பது ஓரியோ தான். அமெரிக்காவை சேர்ந்த Mondelez International தயாரிப்பான இந்த குக்கி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் நொறுக்கு தீனியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

1912-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 102 வருடங்களாக உலகம் முழுவதும் விற்பனையாகி வரும் இந்த பிஸ்கேட் உலகின் நம்பர் ஒன் குக்கியாக உள்ளது. வெறும் குக்கியாக மட்டுமல்லாமல் நமது இல்லத்தரசிகள் இதை வைத்து கேக், சேன்விஜ், ஐஸ்கிரீம் என விதவித உணவு பொருட்களை வேறு கண்டுபிடித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இப்படி அனைவராலும் அறியப்பட்ட OREO-வில் வைக்கப்பட்டிருக்கும் கிரீமில் மெழுகு போன்ற பொருள் இருப்பதாக வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் வேற எங்கையும் இல்லைங்க நம்ம சென்னையில் உள்ள கடையில் வாங்கப்பட்ட OREO-ல் தான் இருந்திருக்கிறது.

ஏற்கனவே பிரபல maggi noodles -ல் கலக்கப்படும் ரசாயம் குழந்தைகளுக்கு பேராபத்தை விளைவிக்க கூடும் என தெரியவந்ததால் அந்த நூடுல்ஸ் விற்பனையை பல நாடுகள் தடை செய்திருந்தன. பின்னர் ரசாயன கலப்பின்றி நூடுல்ஸ் செய்வதாக maggi noodles நிறுவனம் தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் பல நாடுகளில் maggi noodles அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் பேவரட்டாக இருக்கும் OREO biscuit-ல் உள் வைக்கப்பட்டிருக்கும் கிரீமில் ஊதா நிற "மெழுகு போன்ற பொருள்" கிடைத்துள்ளது. பார்ப்பதற்கு மெழுகு துகள் போல் காட்சியளிக்கும் இந்த பொருள் இரண்டு பிஸ்கேட்டுகளுக்கு இடையில் மறைந்திருக்கும் கிரீமில் இருந்தது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

"