பல கஷ்டங்களை கடந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் யோகிபாபு ஹீரோ அம்சத்துடன் நடித்த படங்கள் கூட முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடி வெற்றி பெற்று விடுவதால், சில சிறு பட்ஜெட் படங்களுக்கு இவரை வைத்து புரோமோஷன் நடந்து வருகிறது.யோகி பாபு மார்க்கெட் உச்சத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு அவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருப்பாகாகவும் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

இந்நிலையில் ரசிகர்களை ஏமாற்றுவது போல், யோகி பாபு நடிக்காத படம் ’தெளலத்', இந்த படத்தில் யோகி பாபுவின் புகைப்படத்தை வெளியிட்டு பட குழு விளம்பரம் செய்துள்ளது. இதை அறிந்த யோகி பாபு, உடனடியாக இந்த தகவலை மறுக்கும் விதத்தில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.இதில் அவர் கூறியிருப்பதாவது, இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து  தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், தயவு செய்து இப்படி செய்யாதீர்கள், நான் நடித்த சீன்களை பயன்படுத்தி போஸ்டர் வெளியிடுவது தவறு இல்லை, மாறாக நான் தான் ஹீரோ போல் சித்தரித்து புகைப்படங்கள் வெளியிடுவதால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கஷ்டம். யோகி பாபு தான் முழுமையாக நடித்திருப்பார் என நம்பி சென்று பல ரசிகர்கள் ஏமாறுவதாக வருத்தம் அளிக்கிறது. எனவே... இப்படி செய்ய வேண்டாம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் என கோரிக்கை விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் முகமது அலி யோகிபாபு வெளியிட்ட வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த கேரக்டருக்கு யோகி பாபு தான் சரியாக இருப்பார் என நடிக்க வைத்ததாகவும், முதலில் நன்றாக நடித்து கொடுத்தவர். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால் டப்பிங் செய்யாமல் இழுத்தடித்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார். அதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்தே டப்பிங் பேசினார். அதனால் என் படம் 6 மாதம் லேட்டாகிவிட்டது. அதனால் பண இழப்பும், மன உளைச்சலுக்கும் ஆளானேன். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த நடிகர் விளம்பரம் செய்யக்கூடாது என கூறுவது எந்த வகையில் நியாயம். எந்த நடிகரும் இது போல் தயாரிப்பாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது என கூறியுள்ளார். இச்சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.