குடியுரிமை சட்டம் தொடர்பாக வாய் திறக்காமல் மௌனம் காத்துவரும்  பாலிவுட் நடிகர்கள் வெட்கி தலைகுனிய வேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார் தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர்  செல்வி ஜெயலலிதாவாக வேடம் ஏற்று நடித்துவரும்  அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் .  திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது .  இஸ்லாமிய மக்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட சட்டம் என குறி கல்லூரி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில்  இச்சட்டம் குறித்து திரை நட்சத்திரங்களும் பிரபலங்களும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .  பலர் இச்சட்டம் குறித்து பேசவே தயங்கும் நிலையில் பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் கழுத்தை நெறிக்கும் சட்டம் எனவே அதை திரும்பப் பெற வேண்டுமென தெரிவித்திருந்தார் . இந்நிலையில் தலைவி பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திருத்தச்சட்டம் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார் .  இது குறித்து பேட்டி  அளித்துள்ள அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பாக வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்படவேண்டும் பாலிவுட்டில் அனைவரும் நாள் ஒன்றுக்கு தங்களது முகத்தை  20 முறை  கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்கள். 

ஏதாவது கேட்டால் எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பார் ,  இன்னும் சிலர் இருக்கின்றனர் அவர்கள் நாங்கள் கலைஞர்கள் நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்று கேட்பார் .  அவர்கள் எல்லாம் அழைத்து வந்து  குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துக் கூறவைக்க  வேண்டும்  இதுபோன்ற நபர்களின்  நடவடிக்கைகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் .  இன்ஸ்டாகிராமில்  வெறும் ஒரு போஸ்ட் போட்டு விட்டால் போதும் என்று நினைக்கின்றனர் இவ்வாறு நடிகை கங்கனா  ரனாவத் காட்டமாக தெரிவித்துள்ளார் .