thoothukudi issue internet persons scolding

தமிழ் சினிமாவில் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உடையவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் எது செய்தாலும் அதனை ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள் ரசிகர்கள். ஆனால் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இவர்கள் குரல் கொடுப்பார்களா? என்றால், அது சந்தேகம் தான் என நினைக்க தோன்றுகிறது தற்போது இவர்கள் நடந்துக் கொள்ளும் விதம்.

அந்த வகையில் முத்துக் குளிக்கும் தூத்துக்குடி நகரமே, கடந்த ஓரிரு தினங்களாக ரத்தக் குளியலில் நனைந்த போதிலும், இதுவரை தன்னுடைய ரசிகர்களுக்காகவோ அல்லது அப்பாவி மக்களுக்காக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமம் மௌனம் சாதித்து வருகின்றனர் இந்த இரு கோலிவுட் நடிகர்கள். 

இதனால் பல நெடிசன்கள் விஜய், அஜித், இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தாங்கள் நடித்த திரைப்படங்களை காசு கொடுத்து பார்க்க மட்டும் தான் இவர்களுக்கு ரசிகர்கள் தேவை, மக்கள் தேவை, ஆனால் ரசிகர்களாலும், மக்களாலும், வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து, இவர்கள் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட மறுத்து வருகின்றனர் என சமூக வலைத்தளத்தில் பலர் கூறி வருகின்றனர்.

எனினும், அஜித் எப்போதும் எந்த பிரச்சனைக்கும் வாயை திறக்கவே மாட்டார். ஆனால் விஜய் எல்லாத்துக்கும் முந்திக்கொண்டு வந்து கருத்து சொல்வார். ஆனால் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு மட்டும் ஏன் எதுவும் சொல்லவில்லை என்று கூறி அஜித்தை விட இளைய தளபதி விஜயை தான் பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வசைப்பாடி வருகின்றனர்.