ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
 

பிருத்வி ராஜன் கதாநாயகனாகவும் , வீணா என்பவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன்,  குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் உத்தமராஜா இசையமைத்யுள்ளார். பிரபல நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் படபிடிப்பு நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தத நிலையில். அதற்கான படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது.
 
இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில்அனைவருக்கும்  கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.
 
அதோடு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் உணவுகள் வழங்கினர். 
 
ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள்  எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.