பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். 

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கண்டித்தும் கூட, ஏன் போலீசில் புகார் கொடுத்தும் மீரா மிதுன் வாயை மூட முடியவில்லை.


இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

தற்போது மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்துள்ள மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் மகேஷ் பட் இயக்கத்தில் அவரின் மகள்கள் பூஜா, ஆலியா, சஞ்சய் தத், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சதக் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அந்த ட்ரெய்லரை லைக் செய்தவர்களை விட டிஸ்லைக் செய்தவர்கள் தான் அதிகம். இந்தியாவில் யூடியூபில் வெளியான 24 மணிநேரத்தில் அதிகம் டிஸ்லைக் பெற்ற வீடியோ என்ற சாதனையை சதக் 2 ட்ரெய்லர் படைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: பிகினியில் மாளவிகா மோகனன்... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த “மாஸ்டர்” நாயகி...!

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீரா மிதுன், #Sadak2dislike நல்ல விஷயம், விரைவில் சூர்யா மற்றும் விஜய்யின் ட்ரெய்லர்களுக்கும் தமிழகத்தில் இதே நிலை தான் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ நீ பெரிய பத்தினி சாபம் விட்டால் அப்படியே பழிச்சிட போகுது? என பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.