கடந்த வாரம் ரிலீஸான அமலா பாலின் ‘ஆடை’ விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ஆகிய இரு படங்களும் தியேட்டர்களில் காற்று வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த இரு படங்களுடன் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி சைலண்டாக வெளியான ‘த லயன் கிங்’அனிமேஷன் படம் தமிழகம் முழுக்கவே சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கமலில் தயாரிப்பு, சூப்பர் ஹீரோ விக்ரம், அக்‌ஷரா ஹாசன் ஆகியோரின் நடிப்பு, ஜிப்ரானின் இசை என்று 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக வெளியான படம் ‘கடாரம் கொண்டான்’. ரிலீஸுக்கு முன்னர் இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல், ‘ஆங்கிலப்படம் பார்ப்பதுபோல் உள்ளது, விக்ரம் அபாரமாக நடித்துள்ளார் என்றெல்லாம் பாராட்டினார். ஆனால் இப்படம் குழப்பமான திரைக்கதையால், விக்ரமுக்கு படத்தில் காட்சிகள் குறைவாக இருந்ததால் வெளியான முதல்நாளே தோல்விப்படம் கணக்கில் வந்துவிட்டது.

இன்னொரு பக்கம் அமலா பாலின் நிர்வாண காட்சிகளுக்காகவே பரபரப்பாகப் பேசப்பட்ட ‘ஆடை’படத்தில் அவரது நிர்வாணத்தைத் த்விர சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு சமாச்சாரமும் இல்லாததால் படம் பார்க்க வந்த மக்கள் திருதி அடையவில்லை. அமலாபால் குழுவினரோ தியேட்டர் தியேட்டராகப் படியேறி மக்களை வரவழைக்க படுபயங்கர பல்டிகள் அடித்தும் ஒரு பலனும் இல்லை. இவ்விரு படங்களுமே ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில், உடன் ரிலீஸான ‘த லயன் கிங்’படம் வசூலில் பட்டயக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடுமைதான் தற்போது நடந்து வருகிறது. சாம்பிளுக்கு சென்னை தியேட்டர்களின் மாலை நேரக் காட்சி நிலவரம் இதோ...