பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், குறைந்த அளவிலான வாக்குகள் பெற்ற பிரபலங்கள், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி, ஆரி, மற்றும் ஆஜித் ஆகிய 5 பேரில் இருந்து ஒருவர் வெளியேற உள்ளார். 

மக்களின் கணிப்பு படி, பிக்பாஸ் வீட்டில் மிகவும் சுவாரஸ்யம் குறைவாக விளையாடுபவர் என்றால் அது ஆஜித் தான் எனவே அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. அதே நேரத்தில் ஆஜித் கையில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் உள்ளதால், அதை வைத்து அவர் பிக்பாஸ் விளையாட்டை தொடரவும் முடியும்.

அதே நேரத்தில் மற்ற நான்கு போட்டியாளர்களின் ஒருவர் வெளியேறுவாரா என்றும், மக்கள் மனதில் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ஷன் செய்யப்படுவது ஆஜித் என்றும், அவர் கையில் உள்ள எவிக்ஷன் ப்ரீ பாஸை பயன்படுத்தி, இந்த நிகழ்ச்சியை மீண்டும் அவர் தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற போவதில்லை என்பது போன்ற தகவல் வெளியே கசிந்துள்ளது. 

இந்த தகவல் உண்மையா என்பது நாளை தெரிந்துவிடும் அது வரை காத்திருப்போம்.