பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களிடம் மும்தாஜால் அதிகம் ஒட்டுதல் காட்ட முடியவில்லை. என்ன தான் எல்லோரிடமும் பாசமாக பேசினாலும் யாருடனும் அவரால் நெருங்கி உறவாட முடியவில்லை. எல்லோரிடமும் குறை காண்பது. அறிவுரை கூறுவது என, ஒருவகையான ஆதிக்கம் அவரிடம் எப்போதும் இருந்தது. இதனால் சக போட்டியாளர்களுக்கு அவர் மீது வெறுப்பு இருந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் பழகி வந்தனர்.


ஆனால் இத்தனை நாள் மறைத்து வைத்த பொறுத்து வந்த அந்த கோபம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் நித்யாவிற்கும் மும்தாஜிற்கும் இடையில் நடந்த சண்டை கூட அந்த வகையை சேர்ந்தது தான். அதை தொடர்ந்து மகத் , மகத்தின் சண்டையை அந்த கணக்கில் சேர்க்க முடியாது தான்.  இருந்தாலும் போட்டியாளர்கள் பார்வையில் மக்கள் மத்தியில் மும்தாஜுக்கு நல்ல பெயர் இருக்கிறது. 

அவருடன் யார் சண்டை போட்டாலும் அவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள் எனும் எண்ணம் வந்திருக்கிறது. இதனால் தான் நேற்று கூட மும்தாஜுடன் பேசும் போது சென்றாயன் ஏன் மகத் மாதிரி நானும் வெளியே போகனுமா என கேட்டார். இதனிடையே இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒட்டு மொத்த போட்டியாளர்களும், மும்தாஜ் மீது அதிருப்தியை காட்டி வருகின்றனர். 

பாலாஜி, விஜயலஷ்மி , சென்றாயன் போன்றோருக்கு தான் இதில் கூடுதல் அதிருப்தி. இதில் நேற்றைய நிகழ்ச்சியின் போது சென்றாயன் , எனக்கு மட்டும் டபுள் நாமினேஷன் பவர் கொடுத்த நான் மும்தாஜை தான் வெளியேற வைப்பேன் என கூறி இருக்கிறார். அந்த அளவிற்கு மும்தாஜ் மீது கடுப்பில் இருக்கிறார் சென்றாயன் இத்தனை நாள் மக்கள் எலிமினேட் செய்ய காத்திருந்த ஐஸ்வர்யா இப்போது தான் எலிமினேஷன் பக்கம் வந்திருக்கிறார். ஆனால் இந்த ஒருவாரமாக மும்தாஜை மீது தான் எல்லார் பார்வையும் திரும்பும்படி இருக்கிறது நிகழ்ச்சி.  இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஒருவேளை மும்தாஜ் இந்த வாரம் எலிமினேட் ஆகிவிடுவாரோ என தோன்றுகிறது. எல்லாம் பிக் பாஸின் திருவிளையாடல் என்றே கூறலாம்.