ஒவ்வொரு வாரமும், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியே சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேற உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது மிகக்குறைவான வாக்குகள் பெற்ற பிரபலம் இவர் தான் என்கிற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களில் இருந்து நாளை ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார். 

தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது. எனவே சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இது யுகத்தில் அடிப்படையில் மட்டுமே இந்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை சுரேஷ் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்லா விட்டால், சோம் சேகர் வெளியேற வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, பல பிரச்சனைகளை கொளுத்தி போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்றி வந்த சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த ஒரு சில வாரங்களாக மிகவும் அமைதியாக மாறிவிட்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இப்படி அமைதியாக இருப்பதும் தன்னுடைய ஸ்டேடர்ஜி என அவர் கூறிவரும் போதிலும்... இது பலருக்கும் பிடிக்கவில்லை. எனவே பழைய மாதிரி சுரேஷ் தன்னுடைய துறுதுறு விளையாட்டுகளையும், குசும்புகளையும் ஆரம்பித்து பிக்பாஸ் வீட்டிலேயே நிலைப்பாரா, அல்லது இந்த வாரமே வெளியே செல்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.