நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள், ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்ததும் சும்மா பிரச்சனைகள் சூடு பிடித்து... காட்டு தீ போல், கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் வனிதா வயல் கார்டு சுற்று மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்து விட்டார் என பிக்பாஸ் அறிவித்த போது, கண்குளிர பிரச்சனை நடப்பதை பார்க்க முடியும் என சிலர்  சந்தோஷப்பட்டாலும், அடிக்கடி கெத்து காட்டி, இவர் காட்டு கத்து கத்தியது பலருக்கு இவர் மீது கோபத்தைத்தான் வரவைத்து.

இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைக்கு பதில், கவின் - லாஸ்லியா காதல் தான் கரைபுரண்டு ஓடுகிறது. 

அவ்வப்போது, மட்டுமே கஸ்தூரி - வனிதா சண்டைகள் வந்து செல்கிறது. இது ஒரு புறம் இருக்க, இந்த வாரத்தின் இறுதி நாட்கள், அதாவது கமல்ஹாசன் வரும் நாட்கள் வந்துவிட்டதால், நாளைய தினம் எந்த போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் சாண்டி, கவின், சேரன், கஸ்தூரி ஆகிய நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சாண்டி, கவின், சேரன் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளதால் இவர்கள் மூவரும் இந்த வாரம் வெளியேறுவது கடினம் தான். அதே வேலையில் இவர்கள் மூவரையும் விட குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளவர் நடிக்க கஸ்தூரி எனவே இவரே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

மேலும் இத்தனை வாரங்கள் திறக்காமல் இருக்கும், ரகசிய அறை இந்த வாரம் கஸ்தூரிக்காக திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வார நிகழ்ச்சியில் இது போன்ற எதிர்பாராத சில திருப்பங்களை எதிர்பார்க்க முடியுமா என்பதே ரசிகர்களின் ஆவலாகவும் உள்ளது.