பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில் இந்த வாரம் ஏவிக்சன் பட்டியலில் சென்ராயன், ஜனனி ஐயர், மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனால் யார் வெளியேற்றப்படுவார் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது. காரணம், சென்ராயன் மற்றும் ஜனனி ஐயருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. அதே போல் ஆரம்பத்தில் இருந்து பொன்னம்பலம் ஏவிக்சன் லிஸ்டில் இடம்பெற்று வந்தாலும் மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியேற உள்ளது யார்? என்பது குறித்த ஒரு ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. இதில் இந்த வாரம் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இந்த வாரம் எலிமிநேஷன் ஆக உள்ள போட்டியாளரை கையேடு அழைத்து செல்வார் என தெரிகிறது.

மேலும் இன்று ஒளிப்பரப்பாக உள்ள நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த வாரம் நடிகர் பொன்னம்பலம் தான் வெளியேறுவார் என்பது போல் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இருந்து மக்காளால் காப்பாற்றப்பட்டு வந்த பொன்னம்பலம் இந்த வாரம் கடும் போட்டி நிலவியதால், குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுவார் என கூறப்படுகிறது.