பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்... யாரும் எதிர்ப்பாராத வண்ணமாக இந்த முறை மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்... யாரும் எதிர்ப்பாராத வண்ணமாக இந்த முறை மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே வயல் கார்டு போட்டியாளராக சிலர் எப்போதும் அனுப்பப்படும் நிலையில், இந்த முறை அதற்க்கு வாய்ப்பு குறைவு என்றே பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிக்பாஸ் வீட்டில் கடைசி இரண்டு போட்டியாளராக வந்துள்ள இருவருமே நடிகர்கள் தான். எப்படியும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற கனவோடு தான் சிபி மற்றும் நிரூப் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் கடைசி வரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, வெற்றிபெற போவது யார்? 100 நாட்களில் நடக்க போவது என்னென்ன என்பது குறித்து இப்போதே பலர் யூகிக்க துவங்கி விட்டனர்.

18 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்த கமல், முதல் முறையாக அகம் டிவி வழியாக போட்டியாளர்கள் 18 பேருடன் பேசினார். அப்போது போட்டியாளர்களை மக்கள் ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் சிறிய சிறிய விஷயங்களால் தான் என அவர்களுக்கு டிப் கொடுத்தார். இது ஆரம்பத்திலேயே அவர்களை அலாட்ர்ட் செய்வது போல் அமைந்தது.