this team did something different during audio release
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானே தயாரித்து, நடித்திருக்கும் ஜுங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா, இன்று நடைபெற்றது. ஜூங்கா திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தினை ரெளத்திரம், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். விஜய் சேதுபதியுடன் இத்திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன், சாயிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துவருகின்றனர். காமெடியனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற ஜுங்கா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே வேஷ்டி மற்றும் ஜுப்பா அணிந்திருந்தனர். இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்திருந்தது, புதுமையாக இருந்தது. அத்துடன் அவர்கள் அனைவரும் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான பிரியங்காவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அவரும் மற்றவர்கள் போல கலக்கலாக வேஷ்டி சட்டையிலேயே வந்திருக்கிறார்.
