this Tamil star over takes super star in twitter

பொதுவாக ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் என பார்க்கும் போது, ரஜினிக்கு தான் ரசிகர்கள் அதிகம். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் ரஜினியையே முந்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நடிகர்கள் தங்கள் டிவிட்டர் பக்கம் மூலமும் படங்களுக்கான பிரமோஷன் வேலைகளை செய்வார்கள். அந்த வகையில் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக பிரமோஷன் செய்யும் தமிழ் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

தற்போது அவரை டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தாண்டி இருக்கிறது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் டிவிட்டரை மிகவும் சரியான முறையில் பயன்படுத்துவது தான். என தெரிவித்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

ரஜினியை டிவிட்டரில் பின் தொடர்பவர்களை விட, சிவகார்த்திகேயனை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். என்பது கூடுதல் தகவல். ரஜினி அவ்வளவாக டிவிட்டர் பக்கம் வருவதில்லை. எப்போதாவது தான் வருவார். இதனால் தான் அவருக்கு குறைவான எண்ணிக்கையில் டிவிட்டர் ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவும் கூறியிருக்கின்றனர் டிவிட்டர் ஃபேன்ஸ்.