this stunt master going to join in ultimate stars upcoming movie

சிறுத்தை சிவா இயக்கத்தில், விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜீத் நடித்துவரும் படம் ”விசுவாசம்”. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் வைத்து தொடங்கி, வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து இதுவரை நடந்து வந்த விவேகம் படப்பிடிப்பு, இப்போது தான் நிறைவடைந்திருக்கிறது. அதனை தொடர்ந்து நடக்க போகும் படப்பிடிப்புக்கான இடம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் விசுவாசம் படக்குழு இப்போது தான் சென்னை வந்திருக்கிறது. விசுவாசம் படத்தில் அஜீத்துடன் , நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, மதுமிதா மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தில் மற்றுமொரு பிரபலம் இணைந்திருக்கிறார். கார்த்தியின் ”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய, திலீப் சுப்பராயன் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.

”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரத்யேகமான சண்டைகாட்சிகளுக்காக நல்ல பெயர் வாங்கி இருந்த திலீப், இப்படத்தில் இணைந்திருப்பதால் ”விசுவாசம்” படத்திலும் அதே மாதிரியான புதுமைகளை, சண்டை காட்சியில் பார்க்கலாம். என்ற எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.