அஜித்தின் பிறந்தாநாளையொட்டி அவர் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடலின் டீஸர் என இரட்டை டிரீட்டை தர இருப்பதாக தகவல் கசிந்தது.

ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளை, சங்கர் படம் போன்று பிரம்மாண்டமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

அதேபோன்று, தனது பிறந்தநாளன்று எதாவது ஒரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் அஜித்.

அஜித்தின் பிறந்தநாளை பேனர்கள், போஸ்டர்கள் வைத்து ஏரியா முழுவதும் இப்போதே தெறிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

அதேபோல், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் டீஸர் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிறது என்று அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் தயாராகிறதாம். ஆம், படத்தின் டீஸர் மட்டும் இல்லாது ஒரு பாடலின் டீஸரும் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.