பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ஐந்தாவது தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக அவருடைய நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சூர்யா அவர்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சன் படமான சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் திரைப்படத்தை தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீரிலீஸ் செய்துள்ளனர். 

சாமியாருக்கு அடிமையாகி, பெண் சாமியாராகவே மாறிவிட்டார் நடிகர் சித்தாரா?.. பயில்வான் கூறிய பகீர் தகவல்!

500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை ரிலீஸ் செய்துள்ள நிலையில் இந்த படம் திரையிடப்பட்ட முதல் காட்சியில் சூர்யாவின் ரசிகர்கள் பலர் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் வரும் அஞ்சலை ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் அந்த காணொளியை பார்த்த சூர்யா உண்மையில் நீங்கள் எனக்கு ஒரு மாபெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளீர்கள் என்று கூறி, ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். சூர்யா தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவாவின் கங்குவா திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? ஜவ்வு போல் இழுத்து கொண்டு போகும் கயல் சீரியல்.. காண்டான ரசிகர்கள்..!