this latest movie teaser over takes super stars movie teaser

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், வரும் ஜீன் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் திரைபபடம் காலா. காலா எப்போது ரிலீசாகும் என காத்திருந்த மக்கள், இப்போது காலாவை ரிலீஸ் செய்ய விடமாட்டோம். என கூறும் அளவிற்கு நிலமை மாறி இருக்கிறது தமிழகத்தில்.

தூத்துக்குடி விஷயத்தில் ரஜினி பேசிய கருத்துக்கள், மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், துப்பாக்கி சூட்டை நியாப்படுத்தும் விதாமாக இருந்தது. அதிலும் அவர் பேசியது போராட்டத்தையும், போராடிய மக்களையும், அவமானப்படுத்துவது போல அமைந்திருக்கிறது. இதனால் மக்கள் ரஜினி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் காலா படத்துக்கான இரண்டாவது டீசர் இன்று வெளியாகியது. அதே சமயம் மிர்ச்சி சிவா நடித்திருக்கும், தமிழ்படம் 2.0-ன் டீசரும் இன்று வெளியாகியது. தமிழ் படம் 2.0 ஏற்கனவே திரைக்கு வந்து, ஒட்டு மொத்த தமிழ் திரை உலகையும், எக்கச்சக்கமாக கலாய்த்த ”தமிழ்படத்தின்” இரண்டாவது பாகம் தான்.

இந்த படத்தில் இம்முறை திரைப்படங்களை மட்டும் கலாய்க்காமல், தமிழகத்தில் சமீபத்தில் நடந்தேறிய அரசியல் கூத்துக்களையும் கலாய்த்திருக்கின்றனர். அதிலும் நேரடியாகவே சில அரசியல் தலைவர்களை கலாய்த்திருக்கிறார் மிர்ச்சி சிவா. விவேகம், மங்காத்தா, மெர்சல், துப்பறிவாளன், என ஒட்டு மொத்த தமிழ் திரைப்படங்களையும் கலாய்த்திருக்கிறது இந்த தமிழ்படம்2.0.

இதனால் இந்த படம் திரைக்கு வரும் போது கண்டிப்பாக நல்ல விருந்து இருக்கு. என இப்போதே மீம்ஸ் போட தொடங்கிவிட்டனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். அதற்கு ஏற்ப தமிழ்படம் 2.0-ன் டீசரும் இணையத்தில் சக்க போடு போட்டு வருகிறது.

இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் இந்த டீசர், இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்தின் டீசரை விட, தமிழ் படம் 2.0 டீசருக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரஜினி படத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவது தமிழ் சினிமா வரலாற்றிலேயே, இது தான் முதல் முறை என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.