ரஜினிகாந்தின் அடுத்து வரவிருக்கும் படமான தர்பார் படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஜினிகாந்தின் அடுத்து வரவிருக்கும் படமான தர்பார் படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக யோகிபாபு அஜித் நடித்து வெளியான விசுவாசம் மற்றும் விஜய் நடித்து வெளியான உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் யோகி பாபு உண்மையில் யோகமான பாபு என திரையுலகமே கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தர்பார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் யோகிபாபு.

இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி என்றும் இன்னொருவர் சமூக சேவகராக வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் வரும் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது